வெள்ளி, 26 ஜூன், 2009

புதிர்வட்டப்பாதையில் மரணம்-நாவல்

குற்ற உணர்வையும்,சஞ்சலத்தையும் தரும் முன்னிலையை முற்றாக நிராகரிப்பதின் மூலமும்,அதை சகல கீழ்மைகளின் முழு உருவமாக உருவகிப்பதின் மூலமும் சாதாரண ஒரு லௌகீக மனம் அதிலிருந்து தப்பித்துக் கொள்கிறது.
-கென்னி கமாலியல் சான் ஜோஸ் மனிதவியல் கருத்தரங்கில் ஆற்றிய உரையிலிருந்து


கென்னி கமாலியல் அகாலத்தில் அபத்தமான முறையில் மரணமடைந்தான் என்பதை நம்ப மறுக்கிறாள் அவனுடன் பல்கலைகழகத்தில் படித்த,இராணுவத்தில் பணிபுரியும் கணவன் வீட்டிற்க்கே வருவதில்லை என்று குறைக்கூறித் திரியும் அவனுடைய தோழி ஜெனிற்றா.அவன் இப்போதும் ரியோ ப்ராங்கோவிலிருந்து கிழக்கே நானூற்றைம்பது மைல் தொலைவிலுள்ள நெவியே காடுகளில் தனது ஆய்வின் பொருட்டு சடைமுடியுடன் அலைவதாகவும் கூறுகிறாள்.மேலும் அவன் அபத்தமான முறையில் மரணமடையும் ஒரு கோழையில்லையென்றும்,அவனது சமூக பிரக்ஞை அக்காலத்தில் தன்னை வியக்கவைத்திருந்த்தாகவும்,படித்துக்கொண்டிருந்த காலம் தொட்டே தான் சார்ந்த சமூக மேம்பாட்டிற்க்கான ஆய்வில் ஈடுபட்டிருந்த ஒரு அறிவுஜீவி எனவும் கூறுகிறாள் அவள்.

நான் எழுதிக்கொண்டிருக்கும் “புதிர்வட்டப்பாதையில் மரணம்” நாவலின் முதல் பத்தி

2 கருத்துகள்:

  1. வாழ்த்துக்கள்! புதிய படிமங்கள் ​பொதிந்த நாவலாய் இருக்குமென்று நம்புகிறேன். சந்திப்பிழைகளில் கவனம் ​கொள்க.

    பதிலளிநீக்கு
  2. நன்றி ஜெகநாதன்.நான் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கையில் எழுதிய முழுமைப் பெறாத நாவல் இது.தற்போது என்னிடம் ஐம்பது பக்கங்கள் கொண்ட வரைவு மட்டுமே உள்ளது.ஆறு மாதத்திற்க்குள் எழுதி முடிக்க நினைத்துள்ளேன்.உங்கள் கருத்துக்கு நன்றி.எதாவது தவறு இருந்தால் சுட்டிக்காட்டவும்.

    பதிலளிநீக்கு